news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆன விவகாரம்
tv

Also Watch

tv

Read this

ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆன விவகாரம்

Jananayagan

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jana nayagan

ஜனநாயகன் திரைப்படம் லீக் : 

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்  கடைசியாக நடித்த ​ஜனநாயகன்' என்ற தமிழ் திரைப்படத்தை அனுமதியின்றி இணையதளங்களில் கசியவிட்டதாக, 6 பேரை தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் வந்த புகாரின் பேரில், மாநில சைபர் குற்றப் புலனாய்வு மையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.தகவல் தொழில்நுட்பச் சட்டம் , பதிப்புரிமைச் சட்டம் மற்றும் சினிமாட்டோகிராஃப் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டது. ​டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்த போலீசார், கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் லிங்க் பகிர்வு தளங்கள் மூலம் படத்தைப் பதிவேற்றிப் பகிர்ந்த 6 பேரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கைது செய்யப்பட்டவர்கள் சென்னை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திரைப்படத்தை சட்டவிரோதமாகப் பதிவேற்றிய 300-க்கும் மேற்பட்ட இணையதள இணைப்புகளை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் மற்றும் கோப்பு பகிர்வு சேவைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேலும் பலர் இதில் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஜனநாயகன் படத்தை டவுன்லோடு செய்தாலோ பகிர்ந்தாளோ அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் இது போன்ற பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களைப் பதிவிறக்கம் செய்வதும், பகிர்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
இயக்குனர் அமீர் பரபரப்பு குற்றச்சாட்டு

இயக்குனர் அமீர் பரபரப்பு குற்றச்சாட்டு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 கோடி அமெரிக்க டாலர் நிதி, அழகான மனைவி

2
50 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved