நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் 2 வது பாடலான காதல் ஃபெயில் என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் எழுதி பாடியுள்ள இந்த பாடல் குறித்த அப்டேட்டை கடந்த சில நாட்களுக்கு முன் படக்குழு வெளியிட்டது. அதன்படி இந்தப் பாடல் காதல் தோல்வி பாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.