சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ரெட்ரோ படத்தின் 'எதற்காக மறுபடி' என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 1-ம் தேதி வெளியான 'ரெட்ரோ' திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.