ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படத்தை, ஓடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வைணவர்களை அவமதிக்கும் வகையில் படத்தில் காட்சிகள் உள்ளதாக கூறி திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி மனுதாக்கல் செய்துள்ளார்.