மோகன்லால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற துடரும் திரைப்படம் வரும் 30-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. தருண் மூர்த்தி இயக்கிய இந்த படத்தில் பிரகாஷ் வர்மா, பினு பப்பு, மேத்யூ தாமஸ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான இப்படம் 115 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது.