news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக மாரி செல்வராஜ் கருத்து
tv

Also Watch

tv

Read this

அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக மாரி செல்வராஜ் கருத்து

Mari Selvaraj

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சினிமா செய்திகள்

அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக மாரி செல்வராஜ் கருத்து :

ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.


இந்த பெரும் குற்றத்தை நிகழ்த்திய குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்களை கண்டறிந்து பெருந்தண்டனைக்கு உட்படுத்துவதன் மூலம், திரைப்படைப்பாளிகளின் பெரும் கனவையும், உழைப்பையும், வாழ்வையும் அரசு பாதுகாத்திட வேண்டுமெனவும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.

இயக்குநர் ரஞ்சித்துக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் :

நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி 9-ந்தேதி கொச்சி துறைமுகம் பகுதியில் தனது படத்தில் நடிக்க வந்த நடிகையிடம் ரஞ்சித் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் பேரில் கேரள போலீசார் ரஞ்சித்தை கைது செய்து எர்ணாகுளம் கிளை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், ஜாமீன் வழங்க கோரி ரஞ்சித் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த எர்ணாகுளம் முதல் வகுப்பு நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

பிரபலங்கள் மீது வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் போலீஸில் புகார் :

தனியார் தொலைக்காட்சியின் பிரபல சமையல் நிகழ்ச்சியின் ஷூட்டிங்கின் போது பிக்பாஸ் பிரபலமும் பாடகருமான கானா வினோத்,புகழ், மாகாபா ஆனந்த் ஆகிய 3 பேரும் இணைந்து தன்னை அடித்ததாக இன்ஸ்டா பிரபலம் திவாகர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து திவாகர் வெளியிட்ட வீடியோவில், சமையல் நிகழ்ச்சியில் ஏப்ரல் 10 அன்று கலந்துகொண்டதாகவும், அங்கு கானா வினோத் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் தகாத வார்த்தகளில் பேசியதாக தெரிவித்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசியதால் கானா வினோத், புகழ் இணைந்து தன்னை அடித்ததாகவும், இவர்களுடன் மாகாபா ஆனந்த் மதுபோதையில் தன்னை இரும்பு கம்பியால் அடித்ததாக கூறினார்.

ஓடிடியில் பவன் கல்யாணின் "உஸ்தாத் பகத் சிங்" :

பவன் கல்யாண் நடிப்பில் கடந்த மாதம் வெளியான உஸ்தாத் பகத் சிங் திரைப்படம் நெட்ஃபிளிக்சில் வரும் 16ஆம் தேதி வெளியாகிறது. இயக்கிய இந்த ஆக்ஷன் படத்தில் ஸ்ரீலீலா, ராஷி கன்னா, பார்திபன், ராவ் ரமேஷ், கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related Link
பின்னணிப்பாடகி ஆஷா போஸ்லே மறைவு

பின்னணிப்பாடகி ஆஷா போஸ்லே மறைவு






SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சுமார் 3மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

0
38 mins agoshare
திண்டுக்கல் பழனி கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved