Also Watch
Read this
Posted on: Nov 21, 2025 03:05 PM
By: Web Team

நடிகர் மம்முட்டியின் கிரைம் திரில்லர் திரைப்படமான “களம்காவல்” ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. ஜிதின் கே.ஜோஷ் இயக்கிய இத்திரைப்படத்தை நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி இணைந்து தயாரித்துள்ளனர். காவல்துறைக்குச் சவால்விடும் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார். திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved