தீபாவளி திருநாள் அன்று கருப்பு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரெட்ரோ திரைப்படத்தை அடுத்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ளார். இது அவரது 45-ஆவது திரைப்படமாகும். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் கருப்பு திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.