Also Watch
Read this
By: Manigandan Raja

"போகி" திரைப்படம் :
நடிகர் ஷர்வா நடிக்கும் "போகி" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அதிரடி ஆக்சன் இயக்குநர் சம்பத் நந்தி இயக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், அவர் முரட்டுத்தனம் மற்றும் மூர்க்கத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
அடர்த்தியான ஒழுங்கற்ற தாடி, மீசை, சுருள் முடி ஆகியவை அவருக்குள் ஒரு தீவிரமான போர்க்குணம் இருப்பதை காட்சிப்படுத்துகிறது. இந்த திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஆகஸ்ட் 28-ம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகையின்போது படம் வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved