நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ரெட்ரோ படத்தின் டிரைலர் யூடியூபில் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது. படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள நிலையில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் வரும் மே 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது