தனது சக போட்டியாளரான கமலா ஹாரீஸை ரஷ்ய அதிபர் புடின் ஆதரிப்பதாக கூறியது தன்னை புண்படுத்தியதாக , குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் தெரிவித்தார். WISCONSIN மாகாணம் MOSINEE நகரில் தனது பரப்புரையில் பேசிய அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்று ரஷ்யா விரும்புவதாகவும், அதிபர் புடின் ஏன் கமலாவை ஆதரித்தார் என்பது தமக்கு ஆச்சரியமாக உள்ளதாகவும் கூறினார். வரும் அதிபர் தேர்தலில் செல்வாக்கு செலுத்துவதற்காக சட்டவிரோதமாக ரஷ்ய சார்பு பிரச்சாரத்தை மேற்கொண்டதாக இரு ரஷ்ய ஊடக நிர்வாகிகள் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டிய மறுநாள் அதிபர் புடின் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.