அடுத்த அரசியல் வாரிசு யார் :வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அந்த நாட்டின் அடுத்த அரசியல் வாரிசாக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தென்கொரிய உளவு அமைப்பான என்ஐஎஸ் தெரிவித்துள்ளது. 13 வயதாகும் கிம் ஜு ஏ அடுத்த அரசியல் வாரிசு ஆவதற்கான பயிற்சிகளை ஏற்கெனவே முடித்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வடகொரியாவின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வான தொழிலாளர் கட்சி மாநாடு இம்மாத இறுதியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கிம் ஜு ஏவுக்குக் கட்சியின் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. Related Link தனுஷ் நடிக்கும் D56 திரைப்படம்