Also Watch
Read this
Posted on: Jan 10, 2026 01:48 PM
By: Manigandan Raja

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் ஜெர்மனி பிரதமர் பிரீட்ரிக் மெர்ஸ் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது ஜெர்மனி பிரதமரின் இந்தியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும்.12 ஆம் தேதி அகமதாபாத்தில் பிரதமர் மோடி- ஜெர்மனி பிரதமர் பிரீட்ரிக் மெர்ஸ் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம், முதலீடு, தொழில் நுட்பம், கல்வி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி விவாதிக்கப்படும் என தெரிகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved