அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் : ஈரான் போர்க் கப்பலான IRIS Dena மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தகவலறிந்து சென்ற இலங்கை கடற்படை 32 பேரை உயிருடன் மீட்டதோடு, உயிரிழந்தவர்களின் சடலங்களையும் மீட்டுள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற International Fleet Review (IFR) 2026 மற்றும் மிலன் (MILAN) 2026 கடற்படை பயிற்சியில் பங்கேற்று விட்டு, IRIS Dena ஈரானுக்கு திரும்பியது. இலங்கை கடற்கரையில் இருந்து சுமார் 40 நாட்டிகல் மைல் தொலைவில் இந்திய பெருங்கடல் பகுதியில் சென்றபோது, IRIS Dena மீது அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியது. Related Link அஜர்பைஜான் விமான நிலையத்தில் தாக்குதல்