சவுதி அரேபியாவுக்கு சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணைகள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மாதம் இறுதியில் சவுதி அரேபியா செல்ல உள்ள நிலையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அட்வான்ஸ் ஏவுகணைகள் மற்றும் மற்ற தொழில்நுட்ப உதவிகளுக்கான ஆயுதங்களை அமெரிக்க விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக F-15 போர் விமானம் அதிக அளவில் வைத்திருக்கும் நாடாகவும் சவுதி அரேபியா உள்ளது.