ஈரானில் போராட்டத்தை தூண்டிவிட்டு கலவரத்திற்கு முக்கிய காரணமாக டிரம்ப் இருந்ததாக அந்நாட்டின் உச்ச தலைவர் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது அந்நாட்டு அரசு நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் போராட்டத்திற்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்ததாக ஈரான் உச்ச தலைவர் அபயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். மேலும் ஈரானின் பொருளாதார மற்றும் அரசியல் வளங்கள் மீது அமெரிக்க ஆதிக்கம் செலுத்த முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.இதையும் படியுங்கள் : எமனாக மாறிய பனிமூட்டம் - விபத்துகளில் 23 பேர் பலி