அமெரிக்காவின் தீவிர வலதுசாரியும், டிரம்பின்ஆதரவாளருமான Charlie Kirk-ன் கொலையை தொடர்ந்து இடதுசாரிகளால் வழிநடத்தப்படும் Antifa-வை பயங்கரவாத அமைப்பாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் இனவாதம் மற்றும் தீவிர வலதுசாரி சித்தாந்தத்துக்கு எதிராக "anti-fascist" என்ற Antifa அமைப்பு செயலாற்றி வருகிறது. அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த டிரம்ப், அதற்கு நிதியளிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.