Also Watch
Read this
By: Web Team

காசாவில் புலம்பெயர்ந்த மக்கள் ஒருவேளை உணவுக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தொண்டு நிறுவனம் வழங்கிய சூப்பை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிய அவலம் அரங்கேறியது.
இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சாமானிய மக்களால் வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி விண்ணை முட்டுகிறது.
இதனால், ஐ.நா. மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உணவுப் பொருட்களுக்காக மக்கள் காத்துக் கிடக்கின்றனர்.
பசி பட்டினியால் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, தங்களுக்கு மனிதாபமான உதவிகள் கிடைக்கும் வகையில், எல்லைகளை திறந்துவிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved