Also Watch
Read this
By: Manigandan Raja

கொடூரமாக தாக்கிய சிறுவன் :
ரஷ்யாவில் இந்தியர் உட்பட 8 பேரை கத்தியால் கொடூரமாக தாக்கிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். உஃபா பகுதியில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த சிறுவன், தான் வைத்திருந்த கத்தியால் அங்கிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாகக் குத்தியதாக தெரிகிறது.
தொடர்ந்து சிறுவன் கத்தியால் தன்னைத்தானே உடலில் கிழித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான 8 பேரையும், கொலை வெறி முயற்சியில் ஈடுபட்ட சிறுவனையும் போலீசார் மருத்துவமனையில் அனுமத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved