காபூல், பயங்கரவாதிகளுக்கு உதவுவதாகவும், இந்தியாவிற்கு "பினாமியாக" செயல்படுவதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியுள்ளார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக இரு நாட்டுகளுக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வரும் மோதலில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு 48 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனை மீறி பாகிஸ்தான், ஆப்கான் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்நிலையில் பாகிஸ்தானில் வசிக்கும் அனைத்து ஆப்கானியர்களும் திரும்பி செல்ல வேண்டும் என்றும் பாகிஸ்தானின் வளங்கள் அனைத்தும் அதன் சொந்த மக்களுக்கே என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.