Also Watch
Read this
By: Web Team

ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா நகரையே அழித்துவிடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ((Israel Katz)) பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் , இஸ்ரேலின் நிபந்தனைப்படி ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால், அவர்களுக்கு நரகத்தின் வாசல் திறக்கப்படும் என்று எச்சரித்தார்.
அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் ஹமாஸ் அமைப்பினரின் தலைநகரான காசாவை ரஃபா மற்றும் பெயிட் ஹனூன் ((Rafah and Beit Hanoun)) போல் மாற்றுவோம் என தெரிவித்தார். இந்த இரு நகரங்களும் இஸ்ரேல் தாக்குதல் காரணமாக இடிபாடுகள் குவிந்த நகரமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved