Also Watch
Read this
By: Web Team

கனடாவில் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான உணவகத்தின் மீது காலிஸ்தான் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காமெடி நடிகர் கபில் சர்மா, தொலைக்காட்சி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என் பன்முகத்தன்மை கொண்டவர்.
இவர், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சர்ரே என்னும் இடத்தில் சமீபத்தில் "கப்ஸ் கேப்" என்கிற பெயரில் உணவகத்தை திறந்தார்.
இந்த உணவகத்தின் மீது காரில் வந்த மர்ம நபர் துப்பாக்கியால் 9 முறை சுட்டுவிட்டு தப்பிவிட்டான். இந்த சம்பவத்துக்கு இந்தியாவால் தேடப்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ஜீத் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளான்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved