பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைக்கும் வரை ரஃபா எல்லையை மூட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காசா - எகிப்து இடையிலான இந்த எல்லை வரும் திங்கள் கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என பாலஸ்தீன தூதரகம் அறிவித்த சிறிது நேரத்திலேயே, மறு அறிவிப்பு வரும் வரை எல்லையை மூட இஸ்ரேல் பிரதமர் உத்தரவிட்டார். இதனால் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.