லெபனானின் பெய்ரூட் நகரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தநிலையில், பெய்ரூட் நகரை குறிவைத்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில், கட்டிடங்களில் இருந்து வெடிகுண்டு புகை வெளியேறும் காட்சிகள் வெளியாகியுள்ளன. தாக்குதல் நடத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.