ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் ஈரானின் உச்சபட்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாஅமைப்பினரை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள தாஹியே பகுதியில் அமைத்துள்ள ஹிஸ்புல்லா தலைமை அலுவலகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரானின் உச்சபட்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பான மறைவிடத்தில் பதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.