Also Watch
Read this
Posted on: Jan 10, 2026 12:49 PM
By: Manigandan Raja

டென்மார்க்கின் இளவரசியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் திருமணம் செய்துகொண்டால், வரதட்சணையாக கிரீன்லாந்து கொடுக்கப்படுமா என்ற பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. கிரீன்லாந்தை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், டென்மார்க்கின் இளவரசியான இசபெல்லாவை டிரம்ப்பின் மகன் பாரன் டிரம்ப் மணமுடிக்க வேண்டும் என்று எக்ஸ் பயனர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். இசபெல்லாவை திருமணம் செய்தால், அமெரிக்காவுக்கு வரதட்சிணையாக கிரீன்லாந்து அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், நீண்டகாலமாகவே முயற்சித்து வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved