அமைதி ஒப்பந்தத்தை மீறினால் ஹமாஸின் முடிவு மிக வேகமாகவும், சீற்றத்துடனும், கொடூரமாகவும் இருக்கும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஹமாஸை அழிக்கும் வாய்ப்பை வரவேற்பதாக மத்திய கிழக்கில் சிறந்த கூட்டாளிகள் வெளிப்படையாக, வலுவாக, மிகுந்த உற்சாகத்துடன் தம்மிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.