ஊழல் வழக்கில் சரியான முறையில் தண்டனை அனுபவிக்காத தாய்லாந்து முன்னாள் பிரதமர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அதிகார துஷ்பிரயோக வழக்கில் தாய்லாந்து பிரதமராக இருந்த தக்சின் ஷினவத்ராவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை ஓராண்டாக குறைத்து மன்னர் மகா வஜிரலங்கோர்ன் உத்தரவிட்டாலும், உடல் நலக்குறைவை காரணம் காட்டி அவர் 6 மாதங்கள் மருத்துவமனையிலேயே தண்டனை காலத்தை கழித்தார். இந்தநிலையில் தக்சின் மீதான சிறை தண்டனை ஒழுங்காக நிறைவேற்றப்படவில்லை என கூறி வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு அவரது உடல் நிலை மோசமாக இல்லை என்றும், எனவே அவரை ஓராண்டு சிறையில் அடைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.