Also Watch
Read this
By: Manigandan Raja

விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது :
ஈரானில் இருந்து வந்த ஏவுகணையை தடுத்து நிறுத்திய போது ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துபாய் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்ட போது விமான நிலையத்திற்கு அருகே வெடி சத்தமும் கரும்புகையும் எழுந்த தாக கூறப்படுகிறது.
இதை அடுத்து பயணிகள், விமான பணியாளர்கள் மற்றும் விமான நிலைய பணியாளர்களின் பாதுகாப்பு கருதி விமான நிலையம் மூடப்பட்டதாக துபாய் அரசின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ், மறு அறிவிப்பு வரும் வரை துபாயில் தனது சேவைகளை நிறுத்தி விட்டதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பல இடங்களல் டிரோன் தாக்குதல் நடந்ததால் மூடப்பட்ட துபாய் விமான நிலையம் கடந்த திங்கள் கிழமை திறக்கப்பட்டு சிறிய எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved