Also Watch
Read this
By: Web Team

பிரம்மபுத்திரா நதிக்கு குறுக்கே உலகின் பெரிய அணையை சீனா கட்டி வருவது அருணாச்சல பிரதேசத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என அம்மாநில முதலமைச்சர் பெமா காண்டு அச்சம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், பிரம்மபுத்ரா நதியில் சீனா அணை கட்டுவது கவலைக்குரியது என்றும், சீனா நம்பகமான நாடு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை ஒரு வகையான, ' தண்ணீர் வெடிகுண்டாக' கூட சீனா பயன்படுத்தலாம் எனவும் அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு எச்சரித்துள்ளார். அணை கட்டிய பிறகு, சீனா திடீரென தண்ணீரை திறந்துவிட்டால், தமது சியாங் பகுதி பேரழிவை சந்திக்கும் எனவும் அவர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved