Also Watch
Read this
Posted on: May 25, 2025 09:35 AM
By: Srini Vasan

வட கொரியாவில் 5 ஆயிரம் டன் எடைக்கொண்ட போர்க்கப்பல் விபத்து தொடர்பாக கப்பல் கட்டும் தளத்தின் தலைமை பொறியாளர் உட்பட பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் கடற்படையை வலுப்படுத்தும் வகையில், சோங்ஜினின் வடகிழக்கு துறைமுகத்தில் கடந்த புதன்கிழமை புதிய போர்க்கப்பல் ஏவும் விழா நடைபெற்றது.
இதில் அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு 5 ஆயிரம் டன் எடை கொண்ட புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது கப்பல் நகர்ந்து செல்வதில் சிக்கில் ஏற்பட்டு கப்பலின் அடிபாகங்கள் சேதமடைந்தன.
தனது கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தால் மிகுந்த கோபமடைந்த கிம் ஜாங் உன் நாட்டின் கண்ணியத்தை சேதப்படுத்தியதாகவும், அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved