அமெரிக்காவில் தொலைதொடர்பு நிறுவனம் நடத்தி வந்த இந்திய வம்சாவளியான பங்கிம் பிரஹம்பட் (( Bankim Brahmbhatt )), போலியான ஆவணங்கள் தயாரித்து 4,200 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழிலான The Wall Street Journal-ல் செய்தி வெளியாகியுள்ளது. தன் நிறுவனத்தின் பெயரில் 2020 முதல் கடன் வாங்க துவங்கிய பங்கிம் பிரஹம்பட் (( Bankim Brahmbhatt )), அதற்கான வருவாய் ஆதாரங்கள், வாடிக்கையார் நிறுவனங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அமெரிக்க தனியார் நிதி நிறுவனமான, 'பிளாக்ராக்'-யிடம் சமர்பித்தார். அந்த கடன் தொகை, 2024ல், 4 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த ஜூலையில், 'பிளாக்ராக்' நிறுவனம் அவரது கணக்குகளை ஆய்வு செய்த போது, கடன் பெறுவதற்காக போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டிருந்தது தெரிந்தது. மேலும், கடனுக்கான அடமான சொத்துக்களை மொரீஷியஸ் மற்றும் இந்தியாவில் உள்ள கணக்குகளுக்கு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.