ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, முன்னணி கேமிங் நிறுவனங்களில் ஒன்றான ((Mobile Premier League)) எம்.பி.எல் நிறுவனம் தனது ஊழியர்களில் 60 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ள MPL இணை நிறுவனரும், முதன்மை செயல் அதிகாரியுமான சாய் ஸ்ரீனிவாஸ், புதிய சட்டமசோதாவால் வருவாய்க்கு இடமில்லாமல் போய் விட்டதாக தெரிவித்துள்ளார்.