டிஜிட்டல் அரெஸ்ட் என்ற போர்வையில் ஐஐடி மாணவரிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் என்ற போர்வையில்அரசு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து அரங்கேற்றப்படும் மோசடியில் பலர் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்து வருவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மும்பை ஐஐடி மாணவரிடம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஊழியராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட மோசடியாளர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக மாணவரின் செல்போன் எண் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி 7 லட்சம் ரூபாயை கரந்துள்ளனர்.