அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எங்கிருந்தோ வந்த செல்போன் எடப்பாடி பழனிசாமியின் கன்னத்தில் விழ சற்றே பதறிப்போனார். அதிமுக ஐடி விங் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த போது அவரின் கன்னத்தின் மீது செல்போன் விழுந்தது. இதனால் சற்றே அதிர்ச்சி அடைந்த இபிஎஸ், பின்னர் சுதாரித்துக் கொண்டு சிரித்த முகமாக காட்சியளித்தார்.’