கோவை, நீலகிரி மாவட்டங்களில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை அவிநாசி சாலையில் உள்ள STANES என்ற ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்கு திங்கட்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே மின்னஞ்சல் முகவரியிலிருந்து மிரட்டல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டதில் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதேபோல் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள STANES ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கும் போலீசார் சோதனை நடத்தினர்.