வழக்கறிஞர்கள்,பொது இடங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விளம்பரங்கள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பார் கவுன்சில் எச்சரித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வழக்கு தொடர்பாக தங்களை அணுகினால் ஒரே நாளில் உத்தரவு வாங்கி தரப்படும் என சமூக வலைதளங்களில் வழக்கறிஞர்கள் கொடுக்கும் விளம்பரங்களை நம்பி மக்கள் ஏமாறுவதாக கூறினார். மேலும், சட்டப்படி பிறந்த நாள் விளம்பரம் கூட வழக்கறிஞர்கள் வெளியிடக்கூடாது எனவும் அமல்ராஜ் தெரிவித்தார்.