news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இன்றைய விளையாட்டு செய்திகள்
tv

Also Watch

tv

Read this

இன்றைய விளையாட்டு செய்திகள்

டிரியாக் ஓபன் டென்னிஸ்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sports news

2026 ஃபிஃபா உலக கோப்பைக்கு ஈராக் அணி தகுதி :


2026 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ஈராக் அணி தகுதி பெற்றதை அடுத்து, அந்நாட்டு மக்கள் சாலையில் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மெக்சிகோவில் நடைபெற்ற உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டியில்.

ஈராக் அணி பொலிவியாவை 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஈராக் அணி உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

3-க்கு 1 என்கிற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி :

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், பிரேசில் - குரோசியா அணிகளுக்கு இடையே நட்பு ரீதியிலான போட்டியில் பிரேசில் 3-க்கு 1 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் கூடுதல் நேரத்தில் பிரேசில் வீரர் டேனிலோ முதல் கோலை பதிவு செய்தார்.

84-வது நிமிடத்தில் குரோசிய வீரர் லோவ்ரோ மேஜர் பதில் கோல் அடித்ததார். இதனால் ஸ்கோர் சமநிலை பெற்றது. பின்னர், ஆட்டத்தின் 88-வது நிமிடத்தில் பிரேசில் கோல் அடித்து 2-க்கு 1 என முன்னிலை பெற்றது. இதன் பிறகு, வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் பிரேசில் மற்றொரு கோல் அடித்து வெற்றி பெற்றது.

இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி ஜோடி காலிறுதிக்கு தகுதி :

ஆண்களுக்கான டிரியாக் ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டில் நடைபெற்று வரும் தொடரில்.

இந்தியாவின் என்.ஸ்ரீராம் பாலாஜி - ஆஸ்திரியாவை சேர்ந்த நீல் ஓபர்லெய்ட்னர் ஜோடி, ருமேனியாவின் அலெக்சாண்டர் ஜேகன் - போஜ்டன் பவெல் ஜோடியை எதிர்கொண்டது. இதில், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி முதல் செட்டை 2-க்கு 6 என இழந்தாலும், 2-வது செட்டை 6-க்கு 1 என கைப்பற்றியது. பிறகு நடைபெற்ற 3-வது செட்டில் 1-க்கு 0 என ஸ்ரீராம் பாலாஜி ஜோடி கைப்பற்றியது.

கால்பந்து உலகக் கோப்பைக்கு காங்கோ அணி தேர்வு :

52 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு காங்கோ அணி தேர்வானதால், அந்நாட்டில் நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மெக்ஸிகோவில் ஜமைக்கா அணிக்கும் - காங்கோ அணிக்கும் நடைபெற்ற போட்டியில்.

இரு அணிகளுமே 90 நிமிடங்கள் வரை கோல் அடிக்கவில்லை. பிறகு, ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றபோது, சரியாக 100-வது நிமிடத்தில் காங்கோ அணி கோல் அடித்து வெற்றிபெற்றது. இதையடுத்து, கால்பந்து அணிக்கு அந்நாட்டின் அதிபர் மற்றும் அமைச்சர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கு முன்பு, 1974-ல் உலகக் கோப்பைக்கு தேர்வாகியிருந்தது.

Related Link
விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய உலக செய்திகள்

0
1 hr 49 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved