மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி இதயத்தை நொறுக்கி விட்டதாக, இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தாம் ஆட்டமிழந்தது போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், எப்படி தாங்கள் தோற்றோம் என்று தெரியவில்லை எனவும், உண்மையிலேயே மனது கஷ்டமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, கடின உழைப்பை கொடுத்தும் கடைசி 5 - 6 ஓவர்களில் தங்களால் வெற்றியை பெற முடியவில்லை எனவும், தாங்கள் போட்ட திட்டத்துக்கு மாறுதலாக கடைசி ஓவர்களில் நடந்து விட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.