இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில், நடப்பு சாம்பியனான போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் மற்றும் அமெரிக்க வீராங்கனை டேனியல் காலின்ஸ் பலப்பரீட்சை நடத்தினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டேனியல் காலின்ஸ் 6க்கு 1, 7க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.