கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால் பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கோவா அணி வெற்றிபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் தங்களது பலத்தை சமமாக வெளிப்படுத்தின. இருப்பினும் ஆட்ட நேர முடிவில் கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.