சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற ஜானிக் சின்னர் மற்றும் பெஞ்சமின் போன்சி நான்காவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற 3-வது சுற்றின் ஒரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னரும், மற்றொரு போட்டியில் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்சியும் வெற்றி பெற்றனர். அதே போல் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முன்றாவது சுற்றுகளில் அமெரிக்காவின் மேடீசன் கீஸ் மற்றும் ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயா வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினர்.