சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் சபலென்கா மற்றும் முச்சோவா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதே போல் மற்றொரு போட்டியில் செக் வீராங்கனை கரோலினா முச்சோவா, ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா பக்சா-வை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.