சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வரும் 54ஆவது மகளிர் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டியின் முதல் சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் எளிதில் வெற்றி பெற்றார். செரீனா பிரிவில் இடம்பெற்றுள்ள இகா ஸ்வியாடெக்-கும், அமெரிக்காவின் மேடிசன் கீஸும் முதல் சுற்றில் மோதினர். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இகா, 6க்கு 1 மற்றும் 6க்கு 2 என்ற நேர்செட் கணக்கில் மேடிசனை எளிதில் வீழ்த்தினார்.