மும்பையில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா 18 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 30 ரன்களிலும் அவுட் ஆகினர். முகமது சிராஜ் முதல் பந்திலேயே அவுட் ஆக,அடுத்து வந்த விராட் கோலி 4 ரன்களுடன் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து தடுமாறி வரும் நிலையில், இன்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.