கரூர் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெற்ற கந்தசஷ்டி அன்னாபிஷேகத்தில் திரளானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியை ஒட்டி, சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து, பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.