சந்திரகிரகணத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்பட்டு, அக்னி தீர்த்த கடற்கரையில் சந்திரசேகரர் சுவாமிக்கு தீர்த்தவாரி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர் சுவாமி, அக்னி தீர்த்த கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.