ஹரியானா சட்டமன்ற தேர்தல் தோல்வி எதிரொலியாக, கூட்டணியில் இருந்து காங்கிரசை கழற்றிவிட சமாஜ்வாதி கட்சி துணிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் 5-ல் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்த நிலையில், ஆறு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி அறிவித்ததால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.