அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நவம்பர் 6-ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக, அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 6-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த மாநில செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தொடங்குவது, கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு, ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவைத் தவிர மற்ற அனைவரையும் கட்சிக்குள் கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.