news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews "மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பை குறைத்து முறைகேடு"
tv

Also Watch

tv

Read this

"மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பை குறைத்து முறைகேடு"

இபிஎஸ் சாடல்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பை குறைத்து 150 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்படும் நிலையில், மண்டல தலைவர்களாக இருந்த திமுகவினரை காப்பாற்றவே அவர்களை முதலமைச்சர் ராஜினாமா செய்ய உத்தரவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உள்ளாட்சி மன்றங்கள் மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்டவை என்றாலும், இவை உடன்பிறப்புகளின் குடும்ப ஆதிக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையோ என்ற சந்தேகம் எழுவதாக சாடிய அவர், உள்ளாட்சிகளில் நல்லாட்சி என்று கூறுவதை வெறும் வெற்று கோஷமாகவே மக்கள் பார்ப்பதாக விமர்சித்தார்.

மேலும் தமிழக நலனை கவனிக்காமல், குடும்ப நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் அரசு ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
14 hrs 30 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved